பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் 114 ஊழியர்கள் பணி நீக்கம்

March 28, 2023

அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமான பிரஷ் ஒர்க்ஸ், பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தோற்றுநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிரிஷ் மாத்ருபூதம், மார்ச் மாத பணி நீக்க விவரங்களை நேற்று வெளியிட்டார். கிட்டத்தட்ட 114 பேர் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 3 மாதங்களுக்கு முன்னர், 90 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது பணியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பணி நீக்கத்தில், 90 […]

அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமான பிரஷ் ஒர்க்ஸ், பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தோற்றுநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிரிஷ் மாத்ருபூதம், மார்ச் மாத பணி நீக்க விவரங்களை நேற்று வெளியிட்டார். கிட்டத்தட்ட 114 பேர் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 3 மாதங்களுக்கு முன்னர், 90 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது பணியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பணி நீக்கத்தில், 90 பேர் செயல்திறன் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 24 பேரின் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த பதவிகளுக்கான தேவை நீங்கியதால் அவை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2% ஊழியர்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போதைய பணி நீக்கத்தையும் சேர்த்து, மொத்தம் 5200 பேர் நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu