அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 18% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 26% உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17.6% உயர்ந்து, 176.64 கோடியாக பதிவாகியுள்ளது. நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 288 கோடியாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 4.9% உயர்ந்து, 1244 கோடி ரூபாயாக உள்ளது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, பி என் ஜி மற்றும் சி என் ஜி துறைகளில் அதிக முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் மங்களானி தெரிவித்துள்ளார்.