மும்பை தாராவி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 வீடுகள் சேதமடைந்துள்ளது.
மும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், தாராவியின் கமலா நகர் மற்றும் ஷாஹு நகர் பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின. விபத்து குறித்து குடிமை அதிகாரி ஒருவர் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு, குறைந்தது 12 தீயணைப்பு வாகனங்கள், எட்டு தண்ணீர் டேங்கர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சில குடிசைகளில் மட்டுமே தீ பரவியதால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த புகாரும் இல்லை என்று கூறினார்.














