டெஸ்லா பங்குகள் 10% உயர்வு

July 3, 2024

டெஸ்லா வாகன விற்பனை வெகுவாக குறையும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால், கணிப்புகளை மீறி டெஸ்லா வாகன விற்பனையில் நல்ல முன்னேற்றம் பதிவாகியுள்ளது. இதன் எதிரொலியாக, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் வாகன விற்பனை எண்ணிக்கை 443956 ஆக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.8% வீழ்ச்சி என்றாலும், இந்த காலாண்டில் 436000 அளவில் மட்டுமே டெஸ்லா வாகனங்கள் விற்பனையாகும் […]

டெஸ்லா வாகன விற்பனை வெகுவாக குறையும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால், கணிப்புகளை மீறி டெஸ்லா வாகன விற்பனையில் நல்ல முன்னேற்றம் பதிவாகியுள்ளது. இதன் எதிரொலியாக, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 10% அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் வாகன விற்பனை எண்ணிக்கை 443956 ஆக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.8% வீழ்ச்சி என்றாலும், இந்த காலாண்டில் 436000 அளவில் மட்டுமே டெஸ்லா வாகனங்கள் விற்பனையாகும் என்ற கணிப்பை பொய்யாக்கி உள்ளது. நிகழாண்டு தொடக்கம் முதல் டெஸ்லா பங்கு மதிப்பு 7% வீழ்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், நேற்றைய தினத்தில் 10% உயர்வு பதிவாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu