அமெரிக்காவில் அகதிகள் நுழைவதை தடுக்க கடுமையான குடியேற்ற சட்டத்தை டெக்ஸாஸ் மாகாணம் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு கூட்டம் கூட்டமாக சட்டவிரோதமாக அகதிகள் பல ஆண்டுகளாக நுழைந்து வருகின்றனர். இவர்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக வாழ்வாதாரம் தேடி வருகின்றனர். இவர்களால் சமீப காலங்களில் பல்வேறு உள்நாட்டு பிரச்சினைகள் தோன்றி வருகிறது. இவர்களை தடுக்க அரசியல் தலைவர்கள் விவாதம் செய்து வருகிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ஆறு லட்சம் அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்துள்ளனர். இவர்கள் எல்லை பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களை தடுக்கும் விதமாக டெக்ஸாஸ் மாகாணம் கடுமையான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் அகதிகளை கண்டறிந்து கைது செய்யலாம். இந்த குற்றம் கிரிமினல் குற்றமாக கருதப்படும். இதற்கு நீண்ட கால சிறை தண்டனை மற்றும் ஒரு 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்படும். அதோடு அகதிகளை எல்லைக்கு அப்பால் விட்டுவிட முடியும். மீண்டும் நுழைய முயன்றால் அவர்களுக்கு 20 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இது குறித்து டெக்சாஸ் கவர்னர் அப்பார்ட் கூறுகையில், டெக்சாஸ் எல்லை வழியாக அகதிகள் வருவதை இந்த சட்டம் தடுக்கும் என்றார்.