இந்தியர்களுக்கு விசா இன்றி அனுமதி - தாய்லாந்து அறிவிப்பு

October 31, 2023

இந்தியா மற்றும் தைவான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தங்கள் நாட்டில் விசா இன்றி நுழையும் அனுமதியை தாய்லாந்து வழங்கி உள்ளது. நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை இந்த தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், தாய்லாந்து சுற்றுலா வெகுவாக முன்னேறும் என கருதப்படுகிறது.கடந்த செப்டம்பர் மாதத்தில், சீன சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்தில் விசா நடைமுறைகள் நீக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, தற்போது, தைவான் மற்றும் இந்தியாவுக்கு விசா விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இரு நாட்டை […]

இந்தியா மற்றும் தைவான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தங்கள் நாட்டில் விசா இன்றி நுழையும் அனுமதியை தாய்லாந்து வழங்கி உள்ளது. நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை இந்த தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், தாய்லாந்து சுற்றுலா வெகுவாக முன்னேறும் என கருதப்படுகிறது.கடந்த செப்டம்பர் மாதத்தில், சீன சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்தில் விசா நடைமுறைகள் நீக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, தற்போது, தைவான் மற்றும் இந்தியாவுக்கு விசா விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இரு நாட்டை சேர்ந்த குடிமக்கள், தாய்லாந்தில் 30 நாட்கள் வரை தங்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாய்லாந்தைப் பொறுத்தவரை, அந்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினர் எண்ணிக்கையில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. எனவே, இந்த விசா நீக்கம், தாய்லாந்து சுற்றுலாவில் கணிசமான முன்னேற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu