சென்னையில் 46-வது புத்தகக் காட்சி ஜனவரி 6-ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 46-வது புத்தகக் காட்சியை ஜனவரி6 முதல் 22-ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துவது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த 45 ஆண்டுகளாக சென்னை உட்பட பல்வேறு புத்தகக் காட்சியை முன்னின்று நடத்தி பபாசியின் வளர்ச்சியை முன்னெடுத்து சென்ற அனைவருக்கும் நன்றி. சென்னை உலக புத்தகக் காட்சி வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.