மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், ககன்யான் திட்டத்தின் மூலம் பயணிக்க உள்ள 4 விண்வெளி வீரர்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில், முக்கிய விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. பிரதமர் மோடி 1800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு பயணிக்கவுள்ள 4 விண்வெளி வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ககன்யான் திட்டத்தின் குரூப் கேப்டன் ஆக பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன் மற்றும் அங்கத் பிரதாப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விங் கமாண்டர் ஆக சுபான்ஷூ சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.