உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது பெற்றார் லியோனல் மெஸ்ஸி

October 31, 2023

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பலோன் டி ' ஓர் விருதினை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளார். கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதான பலோன் டி ' ஓர் விருதை வருடம் தோறும் பிபா நிறுவனம் 1956 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கான பரிந்துரையில் 30 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் என 60 பேர் இடம்பெற்று இருந்தனர்.அதில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி 8வது […]

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பலோன் டி ' ஓர் விருதினை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளார்.
கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதான பலோன் டி ' ஓர் விருதை வருடம் தோறும் பிபா நிறுவனம் 1956 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கான பரிந்துரையில் 30 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் என 60 பேர் இடம்பெற்று இருந்தனர்.அதில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி 8வது முறையாக இந்த வருடம் உயரிய விருதான பலோன் டி ' ஓர் விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த உலக கோப்பையில் ஏழு கோல் அடுத்து நான்கு ஆட்டநாயகன் விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 2009, 2010,2011, 2012,2015,2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்த விருதினை பெற்றுள்ளார். அதிகம் பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். பெண்களுக்கான இந்த விருதினை ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதி பெற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu