மணிப்பூரில் பாஜக கூட்டணியில் உள்ள MNF கட்சியை தேச விரோத கட்சியாக அறிவிக்கபட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 18 மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜக முதல்வர் பைரன் சிங், பதவி விலக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மிசோரம் முதல்வர் லால்துஹோமா, பைரன் சிங்கின் பதவி விலக்கி, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மிசோரம் தேசிய முன்னணி (MNF) கட்சியும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதற்கு பதிலாக, மணிப்பூர் அரசு MNF கட்சியை 'தேச விரோத' கட்சியாக அறிவித்துள்ளது. MNF, மியான்மர் அகதிகளுக்கு ஆதரவு வழங்குவதை, மணிப்பூர் பிரச்சினைகளில் தலையிடுவதை, மற்றும் இந்திய எல்லைகளில் வேலி அமைக்கும் முயற்சிக்கு தடையாக இருப்பதை குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. MNF இப்போது தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என மணிப்பூர் அரசு கூறியுள்ளது.