நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 1.30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த நிதியாண்டின் மத்தியில் பாதிக்கப்பட்டது. செப்டம்பருக்கு பின் ஏற்றுமதி மீண்டும் அதிகரித்தது. பல்வேறு காரணங்களால் நிதியாண்டின் இறுதி மாதங்களிலும் மந்த நிலை நிலவியது. இருப்பினும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 8.78 சதவீதம் அதிகம். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 34 ஆயிரத்து 350 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பல்வேறு சோதனைகள், வர்த்தக சரிவுகளையும் கடந்து தேசிய அளவில் 3.76 சதவீதமும், திருப்பூர் அளவில் 2.5 சதவீதமும் வளர்ச்சி கிடைத்துள்ளது.