ரூபாய் 2000 நோட்டுக்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது

September 29, 2023

வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் நாளையுடன் முடிவதால் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பின்னர் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது எனவும் அவை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் மே மாதம் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. […]

வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் நாளையுடன் முடிவதால் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பின்னர் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது எனவும் அவை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் மே மாதம் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கினால் அவற்றை ஏற்க வேண்டாம் என போக்குவரத்து துறை, சினிமா தியேட்டர்கள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்குகள் ஆகிய இடங்களில் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கோயில் உண்டிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கக்கூடும் என்பதால் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு பணம் என்னும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு இருப்பின் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu