ஒன்றிய அரசின் கடன் கடந்த செப்டம்பர் வரை ரூ.147.19 லட்சம் கோடி

December 28, 2022

ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அரசின் கடன் ரூ.145.72 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் கடன் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் நிதிப் பத்திரங்களில் 38.3 சதவீதத்தை வா்த்தக வங்கிகள் வைத்துள்ளன. இது […]

ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அரசின் கடன் ரூ.145.72 லட்சம் கோடியாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் கடன் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அரசின் நிதிப் பத்திரங்களில் 38.3 சதவீதத்தை வா்த்தக வங்கிகள் வைத்துள்ளன. இது ஜூன் வரையிலான காலத்தில் 38.04 சதவீதமாக இருந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆா்பிஐ-யின் நிதிக் கொள்கைக் குழு, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 4.9 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயா்த்தியது. ஜூலை 1-ஆம் தேதி 79.09-ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, செப்டம்பா் 30-ஆம் தேதி 81.55-ஆக சரிந்தது என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu