பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

March 30, 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் முதற்கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதியுடன் […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட உள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் முதற்கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1085 பேரின் வேட்பு மனுக்கள் போட்டியிட தகுதி உள்ளதாக ஏற்கப்பட்டுள்ளது. 664 மக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதுச்சேரியில் 27 பேரில் வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .அதன் பின்னர் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu