ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனை துவங்கியது

December 5, 2022

ஜி - 20 நாடுகளின் பிரதிநிதிகளின் முதல் ஆலோசனை கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று துவங்கியது. உலகின் பெரும் பொருளாதார நாடுகள் அடங்கிய ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்தாண்டு செப்டம்பரில் ஜி - 20 மாநாடு நடக்க உள்ளது. இந்நிலையில், ஜி - 20 அமைப்பின் 'ஷெர்பா' எனப்படும் நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று நடந்தது. அடுத்தாண்டு மாநாட்டுக்கு தயாராகும் வகையில், பல்வேறு விஷயங்களில் ஒருமித்த […]

ஜி - 20 நாடுகளின் பிரதிநிதிகளின் முதல் ஆலோசனை கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று துவங்கியது.

உலகின் பெரும் பொருளாதார நாடுகள் அடங்கிய ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்தாண்டு செப்டம்பரில் ஜி - 20 மாநாடு நடக்க உள்ளது. இந்நிலையில், ஜி - 20 அமைப்பின் 'ஷெர்பா' எனப்படும் நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று நடந்தது. அடுத்தாண்டு மாநாட்டுக்கு தயாராகும் வகையில், பல்வேறு விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்படுத்த இது போன்ற கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.

நம் நாட்டின் பிரதிநிதியாக நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். உதய்பூரில் நடந்த முதல் ஆலோசனை கூட்டத்தில் ஜி - 20 நாடுகள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu