போர் ஏற்பட்டால் லெபனான் கற்காலத்திற்கு செல்லும் - இஸ்ரேல் எச்சரிக்கை

June 28, 2024

ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டால் அந்த நாடு கற்காலத்திற்கு செல்லும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கலாண்ட் எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவா கலாண்ட் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், இஸ்ரேல் லெபனான் இடையே உள்ள எல்லை பதற்றத்துக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண எங்கள் அரசு விரும்புகிறது. நாங்கள் போரை விரும்பவில்லை. என்றபோதிலும் எத்தகைய சூழ்நிலையையும் சந்திக்க தயாராக […]

ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டால் அந்த நாடு கற்காலத்திற்கு செல்லும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கலாண்ட் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவா கலாண்ட் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இஸ்ரேல் லெபனான் இடையே உள்ள எல்லை பதற்றத்துக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண எங்கள் அரசு விரும்புகிறது. நாங்கள் போரை விரும்பவில்லை. என்றபோதிலும் எத்தகைய சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.ஹிஸ்புல்லாக்கள் எங்களுடன் போர் செய்தால் லெபனானை கற்காலத்திற்கு அனுப்பும் அளவிற்கு அழிவை ஏற்படுத்தும் சக்தி படைத்தது இஸ்ரேல் ராணுவம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஹமாசுடன் இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்தே ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர். அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். இது எப்பொழுது வேண்டுமானாலும் போராக மாறும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்படி போர் ஏற்பட்டால் அது பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அஞ்சுகின்றன. இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu