உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சங்கர் லால் சர்மா என்பவர் நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜராகி இந்தியில் வாதிட்டார். பல்வேறு ஆவணங்களையும் தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள் எங்களுக்கு இந்தி தெரியாது. உச்ச நீதிமன்றத்தின் வழக்காடும் மொழி ஆங்கிலம் ஆகும் என்றனர்.
மேலும் நீதிபதிகள், உங்களுக்காக ஒரு வழக்கறிஞரை நாங்களே நியமிக்கிறோம். அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார். வழக்கின் அடுத்த விசாரணையை டிச.4-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று தெரிவித்தனர்.














