டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டு நிலவி வருவதால் டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் அரியானா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்றுடன் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து சிகிச்சை வழங்குவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவுகள் மிகவும் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கடும் வெப்பத்தின் காரணமாக டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரியானாவில் இருந்து தற்போது திறந்து விடப்படும் நீர் நிர்ணயிக்கப்பட்டதை விட 100 மில்லியன் கலோன் அளவு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது














