விமானப் படையில் ஏ என்-32-க்கு மாற்றாக நவீன சி-295 ரக விமானம்

December 5, 2022

விமானப் படை போக்குவரத்து பிரிவில் பயன்படுத்தப்படும் பழைய ஏஎன்-32 ரக விமானங்களுக்கு மாற்றாக நவீன சி-295 ரக விமானங்களை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது. விமானப்படையில் உள்ள ஏன்-32 ரக போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாக சி-295 விமானங்களை கொள்முதல் செய்வது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது. விமானப்படையில் வீரர்களை மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ஆன்டனோவ்-32 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுருக்கமாக ஏஎன்-32 என அழைக்கப்படுகிறது. இந்த விமானங்கள் 2030-க்குள் விமானப்படை […]

விமானப் படை போக்குவரத்து பிரிவில் பயன்படுத்தப்படும் பழைய ஏஎன்-32 ரக விமானங்களுக்கு மாற்றாக நவீன சி-295 ரக விமானங்களை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.

விமானப்படையில் உள்ள ஏன்-32 ரக போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாக சி-295 விமானங்களை கொள்முதல் செய்வது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது. விமானப்படையில் வீரர்களை மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ஆன்டனோவ்-32 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுருக்கமாக ஏஎன்-32 என அழைக்கப்படுகிறது. இந்த விமானங்கள் 2030-க்குள் விமானப்படை பணியிலிருந்து விடுவிக்கப்படும்.

இந்த விமானங்களுக்கு சரியான மாற்றாக சி-295 விமானங்கள் இருக்கும் என இந்திய விமானப்படை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால், இந்தியாவில் சி-295 ரக விமானங்களின் தயாரிப்பு தொடர்வதையும் உறுதி செய்ய முடியும் எனவும் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் லடாக், வடகிழக்கு எல்லையில் பாதுகாப்பு படையினரை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu