உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி: யு.யு.லலித்திடம் மத்திய அரசு கருத்து கேட்பு

October 7, 2022

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து யு.யு.லலித்திடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்தது அப்பதவியில் அமரப் போகும் நபரை பரிந்துரைக்குமாறு அவருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடை பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித், 1983-ல் வழக்கறிஞராக […]

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து யு.யு.லலித்திடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்தது அப்பதவியில் அமரப் போகும் நபரை பரிந்துரைக்குமாறு அவருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடை பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித், 1983-ல் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். 2004-ல் மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதி ஆனார். இந்நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரை வெளியாகிவிட்டால், நடைமுறையின்படி நீதிபதிகளைத் தேர்வு செய்யும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடத் தேவையில்லை. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu