பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்ந்து அவையின் நடைமுறையை பாதிக்கின்றன.
பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலிருந்தே எதிர்க்கட்சியினரின் அமளி தொடர்கிறது. இன்று மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பதாகைகள் காட்டி வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்ததை சபாநாயகர் கண்டித்தும், அமைதி கோரியும் பயனளிக்கவில்லை. இதனால், மக்களவை தொடங்கிய 6 நிமிடங்களிலேயே பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேல்சபையிலும் இதே பிரச்சினையால் குழப்பம் நிலவ, அவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தொடரும் அமளிகள் மக்களுக்கு தவறான செய்தியையே தரும் என சபாநாயகர் எச்சரித்தார்.