2023-24ம் கல்வியாண்டில் மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வராது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு கல்விக் கொள்கையை வடிவமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலகளாவிய கல்வி, இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பம் உள்ளிடவற்றை கருத்தில்கொண்டு வடிவமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவரும் வகையிலும், பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக்கொள்கை அமைய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்விக்கொள்கை தயாரிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. பணிகள் நிறைவடையாததால் மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கேட்க முழு திட்டம் தீட்டியுள்ளது. இதன் காரணமாக 2023-24ம் கல்வியாண்டில் மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வராது என தகவல் வெளியாகியுள்ளது.














