மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை அளிக்கும் வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும் என முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மூன்று நாட்களாக மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நான்காவது நாளாக கூட்டம் தொடங்கியது. போராட்டம் இன்றும் தொடரும் நிலையில் மாநிலங்களவை, எம்.பி. கள் சிலர் 267 வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.