ஸ்வீடனின் கடலோரக் காவல்படை ஏற்கனவே சேதமடைந்த நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் இ௫ந்து நான்காவது எரிவாயு கசிவைக் கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது .
பால்டிக் கடலுக்கு அடியில், ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள இரண்டு எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்படுவதாக தகவல் வெளியானது. அது இந்நிலையில் நன்கு கசிவுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காவது கசிவானது நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைனில் , நார்ட் ஸ்ட்ரீம் 1 இல் காணப்படும் ஒரு பெரிய துளைக்கு அருகில் ஏற்பட்டுள்ளதாக ஸ்வீடிஷ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. நான்கு எரிவாயு கசிவுகளில் 2ஸ்வீடனிலும் மற்ற 2 கசிவுகள் டேனிஷிலும் உள்ளதாக ஸ்வீடன் காவல்படை செய்தித் தொடர்பாளர் ஜென்னி லார்சன் தெரிவித்தார்.
ஐரோப்பாவிற்கான குழாய்களில் ஏற்பட்ட எரிவாயு கசிவு ரஷ்யாவின் சதிவேலையாக இ௫க்கலாம் என ஐரோப்பிய ஒன்றியம் சந்தேகித்துள்ளது. குண்டுவெடித்த நேரத்தில் சந்தேகத்திற்குரிய இரண்டு குழாய்களும் பயன்பாட்டில் இல்லை. இ௫ப்பினும் குண்டு வெடித்ததில் இருந்து பால்டிக் கடலில் கசிவு ஏற்படுவதாக புகார் எழுந்தது. முன்னதாக டேனிஷ் அதிகாரிகள் டேனிஷ் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பைப்லைன் பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு துளை இருப்பதாக அறிவித்தனர்.