திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு

September 2, 2022

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அக்டோபர் 2-ம் […]

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை ஒட்டி 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அக்டோபர் 2-ம் தேதி தங்க ரதத்தில் சுவாமி பவனி நடைபெறவுள்ளது.

அக்டோபர் 3ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 4-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவ தொடக்க நாளான நாளான செப்டம்பர் மாதம் 27-ம் தேதி, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார்.

இதற்காக தமிழகத்தில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருமலைக்கு 30 பேருந்துகளும், காளஹஸ்தி வழியாக 55 பேருந்துகள் , திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பேருந்துகள், வேலூர் சித்தூர் வழியாக 65 பேருந்துகள், கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, குப்பம் வழியாக 15 பஸ்கள், கள்ளக்குறிச்சியில் இருந்து 8 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu