இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக யுனெஸ்கோவிலிருந்து விலகியதாக அமெரிக்காவிற்கு குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அரசுத்துறை செய்தியாளர் டாமி ப்ரூஸ் இந்த முடிவை உறுதிப்படுத்தினார்.
கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளுக்காக செயல்படும் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா மீண்டும் வெளியேறியுள்ளது. இந்த முடிவுக்கான தெளிவான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான முடிவுகள் யுனெஸ்கோவில் எடுக்கப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கு முன்னரும் 1984-ம் ஆண்டு ரொனால்ட் ரீகன் காலத்தில் அமெரிக்கா வெளியேறியிருந்தது. பின்னர் 2017-இல் மறுபடியும் விலகிய அமெரிக்கா, இரண்டாண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்தது. இப்போது மீண்டும் விலகுவது சர்வதேச அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.