கேரளாவிற்கு மூன்றாவது வந்தே பாரத் ரயில் ஜூலை 31ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு பயணிகளின் பயண நேரத்தை குறைக்கவும், சொகுசான பயணத்தை கொடுக்கும் வகையிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே கேரளாவில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயிலானது எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவிற்கு சிறப்பு ரயிலாக வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மறு மார்க்கமாக பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.