திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் செயல்பட்டு வந்த தின்னர் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவி பயங்கரமாக எரியத் தொடங்கியதால், அருகிலிருந்த தனியார் பள்ளியில் புகை மூட்டம் ஏற்பட்டது. இது மாணவர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சூழல் உருவாக்கியதால், ஆசிரியர்கள் அவர்களை உடனடியாக வெளியேற்றினர். மேலும், தீயின் தாக்கம் பள்ளிக்குச் செல்லக்கூடும் என்பதால் நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்தது.
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டுள்ளனர். தீ வேகமாக பரவியதால், அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தீ அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.