திபெத் நாட்டைச் சேர்ந்த கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளனர். இவர்களில் சுற்றுலாப் பயணிகளும் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
திபெத் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமப் பகுதிகளில் குறைந்த பட்சம் 472 பேர் இருக்கலாம் என கூறப்படுகிறது. நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவசரகால முறையில் தற்காலிக தொலைத்தொடர்பு சேவை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நிலச்சரிவால் தனியாக மாட்டிக் கொண்டுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.














