டிக் டாக் நிறுவனத்தின் இந்திய ஊழியர்கள் முழுவதுமாக பணி நீக்கம்

February 10, 2023

டிக் டாக் நிறுவனத்தில் இந்திய ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை அன்று 40 பேருக்கு பிங்க் ஸ்லிப் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 6 அல்லது 7 மாத சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், பிப்ரவரி 28ஆம் தேதி இறுதிப்பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் வேறு வாய்ப்புகள் தேடிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலான இந்திய […]

டிக் டாக் நிறுவனத்தில் இந்திய ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை அன்று 40 பேருக்கு பிங்க் ஸ்லிப் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 6 அல்லது 7 மாத சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், பிப்ரவரி 28ஆம் தேதி இறுதிப்பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் வேறு வாய்ப்புகள் தேடிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலான இந்திய ஊழியர்கள் துபாய் மற்றும் பிரேசில் நாடுகளின் டிக் டாக் பிரிவில் பணியாற்ற தொடங்கினர். இந்நிலையில், இந்தியாவில், டிக் டாக்கின் இடம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆல் கைப்பற்றப்பட்டு விட்டதால், டிக் டாக் செயலிக்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது. "இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, டிக் டாக் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை மீட்க முடியாது" என டிக் டாக் உயர் அதிகாரி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu