ஹேக் செய்யப்பட்ட டிக்டாக் செயலி - 2 பில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு

September 7, 2022

பிரபல சீன வீடியோ செயலியான டிக்டாக்கில் 2 பில்லியன் பயனர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு துறை சார்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் டிக்டாக் செயலி மற்றும் அதன் சர்வர்களின் பாதுகாப்பின்மை குறித்து பல்வேறு சைபர் பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுநர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பீ ஹைவ் சைபர் செக்யூரிட்டிஸ் (Bee Hive Cyber Securities) வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "எச்சரிக்கை! டிக் டாக் செயலியில் தரவுகள் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவரும் […]

பிரபல சீன வீடியோ செயலியான டிக்டாக்கில் 2 பில்லியன் பயனர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு துறை சார்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் டிக்டாக் செயலி மற்றும் அதன் சர்வர்களின் பாதுகாப்பின்மை குறித்து பல்வேறு சைபர் பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுநர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பீ ஹைவ் சைபர் செக்யூரிட்டிஸ் (Bee Hive Cyber Securities) வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "எச்சரிக்கை! டிக் டாக் செயலியில் தரவுகள் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவரும் தங்களது கடவுச்சொல்லை மாற்றியமைக்க வேண்டுகிறோம். அத்துடன், இரட்டை கடவு அம்சத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம், டிக்டாக்கில் இருந்து கசிந்துள்ள தரவுகளை சரி பார்த்து, உறுதி செய்த பின்னர், இது பற்றி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சுமார் 2 பில்லியன் டிக்டாக் பயனர்களின் தரவுகள் திருடப்பட்டு இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது.

பீ ஹைவ் சைபர் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் சார்பில், டிராய் ஹண்ட் என்பவர் ட்விட்டரில் முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதன் பின்னர், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ப்ளூ ஹார்நெட் என்பவர், “டிக்டாக் செயலி, தனது பின்னூட்ட சர்வர்களை அலிபாபா நிறுவனத்தின் கிளவுட் பகுதியில் சேமிக்கும் என்பதை யாரும் ஊகித்திருக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். இது குறித்து டிக்டாக் தரப்பில் இருந்து, “தரவுகள் கசிவு செய்தி தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது. அதில் தகவல் திருட்டுக்கு தொடர்பான கோடு (Code) மற்றும் டிக் டாக் செயலியின் மூல கோடு ஆகியவற்றுக்கு இடையில் சம்பந்தம் இல்லை” என்று கூறியுள்ளது. 

இந்நிலையில் மைக்ரோசாப்ட் 365 டிஃபெண்டர் ரிசர்ச் (Microsoft 365 Defender Research) குழு, ஆண்ட்ராய்டில் இயங்கும் டிக் டாக் செயலியை எளிதாக ஹேக் செய்து விடும் ஆபத்து உள்ளதாக அறிவித்துள்ளது. ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி, அதை கிளிக் செய்தால், பயனாளர்களின் ஒட்டுமொத்த தரவுகளையும் ஹேக் செய்து விட முடியும் என்று எச்சரித்துள்ளது. இதனால், டிக்டாக் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu