ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்திற்காக 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆவணி மாத பௌர்ணமி நாளை ஒட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் இன்று காலை 10.45 மணி முதல் நாளை காலை 8.19 மணி வரை கிரிவலம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையில் இருந்து 250 பேருந்துகளும், பெங்களூர் மற்றும் சேலம் வழியில் இருந்து 50 பேருந்துகளும், வேலூர் மற்றும் ஆரணி வழியில் இருந்து 50 பேருந்துகளும் என சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.