கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் நூற்பாலைகளில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது நீடிக்கும் வகையில் நாளை நூற்பாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தமிழக அரசுக்கு 400 கோடிக்கும் மேல் அந்நிய செலவாணி கிடைத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் நூல்களின் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வங்கிக் கடன் வட்டி உயர்வு, அயல்நாட்டில் இருந்து துணிகளை ஏற்றுமதி செய்வது போன்ற பல கட்டுப்பாடுகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளிகள் வேலைவாய்ப்பு இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் தமிழக அரசு நூற்பாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து மின்சாரத்துறை, ஜவுளித்துறை போன்ற அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி உள்ளது.
இதன்படி சென்னை தலைமை செயலகத்தில் நாளை தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம், ஓபன் என்ட் நூற்பாலைகள் சங்கம் என பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.