தமிழக மாணவி சர்வதேச விருது வழங்கும் போட்டியில் ஒருவராக தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 82 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய சர்வதேச விருதை பிரட்டனைச் சேர்ந்த செக். ஓ.ஆர் ஜி அமைப்பு அறிவியலில் கற்றல் மூலம் பயனுள்ள படைப்புகளை உருவாக்கும் தலைசிறந்த மாணவர்கள் ஒருவரை தேர்வு செய்து வழங்கி வருகிறது. இதில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவி வினிஷா உமாசங்கர், 50 இறுதி போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது 12 வது வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி […]

ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 82 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய சர்வதேச விருதை பிரட்டனைச் சேர்ந்த செக். ஓ.ஆர் ஜி அமைப்பு அறிவியலில் கற்றல் மூலம் பயனுள்ள படைப்புகளை உருவாக்கும் தலைசிறந்த மாணவர்கள் ஒருவரை தேர்வு செய்து வழங்கி வருகிறது. இதில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவி வினிஷா உமாசங்கர், 50 இறுதி போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது 12 வது வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, ஸ்மார்ட் மின்விசிறி போன்ற பல படைப்புகளை படைத்துள்ளார்.

மேலும் இந்தியாவில் மொத்தம் ஐந்து மாணவர்கள் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டுக்கான விருதிற்கு 122 நாடுகளைச் சேர்ந்த 3851 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதற்கட்டமாக 50 போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவர். இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 10 பேர் தேர்வு செய்யப்படுவர்.பின்னர் இறுதியாக பத்து பேரில் இருந்து ஒரு மாணவரை இறுதி வெற்றியாளர் என ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படுபவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu