தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் வரும் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் ஜூலை 19ஆம் தேதி ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி சென்று தெரிந்து கொள்ளலாம்