அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்புகள் வெளியிடும். இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாக அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பிக்க tnpsc. gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்கும் முன் தேர்வுக்கான அனைத்து தகுதி வாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து இருக்கிறாரா என உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024 ஆகும். தேர்வுக்கான நாள் 09.06.2024 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பல்வேறு துறைகளில் மொத்தம் 6244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வானது பத்தாம் வகுப்பு அடிப்படையில் நடைபெறும்.