அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் பட்டியல் - தமிழக ரயில் நிலையங்கள் முன்னணி

அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் பட்டியலை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழக ரயில் நிலையங்கள் முதலிடங்களை பிடித்துள்ளன. கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் தெற்கு ரயில்வேயின் வருவாய் 12020 கோடி ஆகும். இதில் பெரும் பங்கு வகிப்பது தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் 10 ரயில் நிலையங்களின் வருவாய் ஆகும். அதில் 5 ரயில் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. கேரளாவில் 4 மற்றும் கர்நாடகாவில் ஒரு ரயில் நிலையம் பட்டியலில் […]

அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் பட்டியலை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழக ரயில் நிலையங்கள் முதலிடங்களை பிடித்துள்ளன.

கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் தெற்கு ரயில்வேயின் வருவாய் 12020 கோடி ஆகும். இதில் பெரும் பங்கு வகிப்பது தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் 10 ரயில் நிலையங்களின் வருவாய் ஆகும். அதில் 5 ரயில் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. கேரளாவில் 4 மற்றும் கர்நாடகாவில் ஒரு ரயில் நிலையம் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முதலாவதாக உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வருவாய் 1216 கோடி அளவில் பதிவாகியுள்ளது. அடுத்ததாக, எழும்பூர் ரயில் நிலையம் 564 கோடி, கோயம்புத்தூர் ரயில் நிலையம் 324.99 கோடி அளவில் வருவாய் ஈட்டி உள்ளன. நான்காம் இடத்தில் 262.67 கோடி வருவாயுடன் திருவனந்தபுரம் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரம் ரயில் நிலையம் 233.67 கோடி வருவாயுடன் 5ம் இடத்திலும், எர்ணாகுளம் ரயில் நிலையம் 227.59 கோடி வருவாயுடன் 6 ம் இடத்திலும் உள்ளன. மதுரை ரயில் நிலையம் 208.74 கோடி வருவாயுடன் 7ம் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை, கோழிக்கோடு, மங்களூரு மற்றும் திருச்சூர் ரயில் நிலையங்கள் பிடித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu