மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் டாப் -10 பட்டியலில் இந்திய வீராங்கனைகள்

இந்தியாவின் இரண்டு பெண் வீராங்கனைகள் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பிடித்துள்ளனர். ஐ.சி.சி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா நான்காவது இடத்திலும், ஹர்மன் பிரீத் கவுர் பத்தாவது இடத்திலும் உள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களில் இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளனர். ஒருநாள் பந்துவீச்சாளராக தரவரிசையில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா முதல் மூன்று இடங்களை […]

இந்தியாவின் இரண்டு பெண் வீராங்கனைகள் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பிடித்துள்ளனர்.

ஐ.சி.சி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா நான்காவது இடத்திலும், ஹர்மன் பிரீத் கவுர் பத்தாவது இடத்திலும் உள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களில் இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளனர். ஒருநாள் பந்துவீச்சாளராக தரவரிசையில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா நான்காவது இடத்திலும், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இவரை தவிர முதல் 10 இடங்களில் வேறு எந்த வீராங்கனைகளும் இல்லை. அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் தட வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu