இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இரண்டு ரயில்கள் மோதியதில் மூன்று பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரப்பையாவிலிருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரயில் சிக்காலிங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் மூன்று பேர் பலியாகினர். இந்த விபத்து சிக்காலிங்கா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நடந்தது. இதில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.