தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆக ஆகியவைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் சுதந்திர தினத்தின் போது ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் சிறந்த மாநகராட்சி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 13 கருப்பொருள்கள் கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக 2 கோடியே 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது சிறந்த மாநகராட்சியில் திருச்சி மற்றும் தாம்பரம், முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இவை தலா ரூபாய் 50 லட்சம் மற்றும் ரூபாய் 30 லட்சம் எனவும், நகராட்சிகளில் ராமேசுவரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது. இவை தலா ரூபாய் 30 லட்சம், 20 லட்சம், 10 லட்சம் எனவும், பேரூராட்சியில் விக்கிரவாண்டி, ஆலங்குடி, வீரக்கால்புதூர் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளது. இவை தலா ரூபாய் 20 லட்சம், 10 லட்சம், 6 லட்சம் என வழங்கப்படுகிறது.
அதேபோல் மண்டலங்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒன்பதாவது மண்டலம் மற்றும் ஐந்தாவது மண்டலம் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா நாளை சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் மு. க. ஸ்டாலின் தலைமையில் வழங்கப்படும்.