காசாவில் உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஐநாவில் தீர்மானம்

October 28, 2023

ஐநா சபை காசா மீதான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு உடனடியான மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே போர் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொது சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்தை ஜோர்டான் முன்வைத்தது. இந்த தீர்மானத்தில் உடனடியான மற்றும் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காசாவில் பொதுமக்கள் இந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு […]

ஐநா சபை காசா மீதான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு உடனடியான மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே போர் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொது சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்தை ஜோர்டான் முன்வைத்தது. இந்த தீர்மானத்தில் உடனடியான மற்றும் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காசாவில் பொதுமக்கள் இந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் ராபா பாதை வழியாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களுக்கு உயிர் காக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை தடையின்றி வழங்குவதற்கான அவசர தேவையை இந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் காசா மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த தீர்மானம் ஐநாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு 120 உறுப்பு நாடுகள் ஆதரவளித்துள்ளனர். 14 நாடுகள் எதிர்த்துள்ளனர். 45 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்து விட்டன. இதனை அடுத்து இந்த தீர்மானம் பொது சபையால் அங்கீகரிக்கப்பட்டது.இந்தத் தீர்மானம் முக்கியம் வாய்ந்தது. ஏனெனில் இது உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அதோடு சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu