அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என தீர்ப்பு

December 20, 2023

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் போட்டியிட தகுதியற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் பிடெனுக்கு எதிராக போட்டியிட்டபோது தோல்வியுற்றார். ஆனால் அதை டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அவர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவருக்கு எதிராக பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது. அந்த […]

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் போட்டியிட தகுதியற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் பிடெனுக்கு எதிராக போட்டியிட்டபோது தோல்வியுற்றார். ஆனால் அதை டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அவர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவருக்கு எதிராக பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் கொலராடோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட தகுதியற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு குடியரசு கட்சி சார்பில் யார் வேட்பாளர் என்ற தேர்தல் நடைபெறும் போது வாக்கு சீட்டில் அவரது பெயர் இடம்பெறக்கூடாது. ஒருவேளை அவர் பெயர் இடம் பெற்று அவருக்கு வாக்களிக்கப்பட்டாலும் அது செல்லாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருந்த போதும் அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடை விதிக்கப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் தரப்பினர் மேல்முறையீடு செய்ய உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி நான்காம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu