அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமிக்கப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "ஜெய் பட்டாச்சார்யா தேசத்தின் மருத்துவ ஆராய்ச்சியில் முக்கிய பங்காற்றி, சுகாதார மேம்பாடு மற்றும் உயிர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுப்பார்" என அவர் கூறியுள்ளார். மேலும், ஜெய் ராபர்ட் எப். கென்னடி ஜூனியருடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் தெரிவித்தார். ஜெய் பட்டாச்சார்யா தற்போது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சுகாதார கொள்கைக்கான பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் பல்வேறு துறைகளில் பிரபல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.