செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டார்.
மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்துக்கு பின்னர், காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டார். துஹின் காந்தா பாண்டே 1987-ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக கடந்து வந்த இவர், முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக பணி புரிந்தவர்.
அதன் பின்னர், இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பு (செபி) தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் நீடிக்க உள்ளார். மத்திய அரசு நியமனக்குழுவின் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.