என்.ஆர்.ஐ மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

January 5, 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்.ஆர்.ஐ மாணவர்களுக்கான கல்வி கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து சதவீத இடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அண்ணா பல்கலைகழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து பிரிவுகளுக்கும் கட்டணமாக 7500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் என்.ஆர். ஐ மற்றும் […]

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்.ஆர்.ஐ மாணவர்களுக்கான கல்வி கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து சதவீத இடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அண்ணா பல்கலைகழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து பிரிவுகளுக்கும் கட்டணமாக 7500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் என்.ஆர். ஐ மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் சி.எஸ்.சி, ஐ.டி, மற்றும் இ.சி. இ. ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டுமே சேர்ந்து வருகிறார்கள். அதனால் அம்மூன்று பாடங்களுக்கு மட்டுமே கட்டணத்தை 7500 அமெரிக்க டாலர்களாகவும், மீதமுள்ள பிற கிளைகளுக்கு கட்டணத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3750 அமெரிக்க டாலராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 6 லட்சத்து 23 ஆயிரம் ஆக இருந்து வரும் கல்வி தொகை வரும் கல்வி ஆண்டு முதல் 50 சதவீதம் குறைத்து 3 லட்சத்து 11 ஆயிரம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu