துருக்கி-சிரியாவில் மீண்டும் இருமுறை நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

February 21, 2023

துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில், நேற்று முதல் மீண்டும் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 மற்றும் 5.8 அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்கள், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இந்த புதிய நிலநடுக்கங்களால், இதுவரை 6 பேர் பலியானதாக தகவல் […]

துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில், நேற்று முதல் மீண்டும் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 மற்றும் 5.8 அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்கள், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த புதிய நிலநடுக்கங்களால், இதுவரை 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால், துருக்கி, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu