துருக்கி அரசு, தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றைக் கொல்லும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது
துருக்கியின் நாடாளுமன்றம் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான தெரு நாய்களை அழிக்கப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் 275-224 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், விலங்கு உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சி மற்றும் அதன் தீவிர தேசியவாத கூட்டாளிகள் எதிர்க்கட்சிகள் இதை "நரபலி சட்டம்" என்று கண்டித்த போதிலும் சட்டத்தை ஆதரித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தெரு நாய்களால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறி, பாதுகாப்பு கருதி இதனை முடிவு செய்துள்ளனர். இந்த சட்டம் எதிர்க்கட்சி நகராட்சிகளுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி விலங்கு நலனுக்கு கேடு விளைவிக்கும் என்று விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.