காசா - அகதிகள் குடியிருப்பில் தீ விபத்து - 21 பேர் பலி

November 18, 2022

பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில், அகதிகள் தங்கி இருந்த குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் வந்ததும், தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்து தொடர்பாக நடந்த விசாரணையில், அதிக அளவு பெட்ரோல் அந்த கட்டிடத்தில் […]

பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில், அகதிகள் தங்கி இருந்த குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவல் வந்ததும், தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்து தொடர்பாக நடந்த விசாரணையில், அதிக அளவு பெட்ரோல் அந்த கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. தீ வேகமாக பரவுவதற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில், கட்டிடத்தில் இருந்த அனைவரும் பலியாகி உள்ளதாக பாலஸ்தீன உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu