ட்விட்டர் ப்ளூ பயனர்கள் 2 மணி நேர வீடியோக்களை பதிவிடலாம் - எலான் மஸ்க்

ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மற்ற பயனர்களை காட்டிலும் அதிக சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், தற்போது ட்விட்டர் ப்ளூ பயனர்கள் 2 மணி நேரம் அல்லது 8 ஜிபி அளவுடைய வீடியோக்களை பதிவேற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது. ட்விட்டர் மூலமாக, எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதே வேளையில், மற்ற ட்விட்டர் பயனர்கள், வெறும் 140 வினாடிகள் மட்டுமே இருக்கும் வீடியோக்களை மட்டுமே பதிவேற்ற முடியும் என கூறியுள்ளார். ட்விட்டர் ப்ளூ சலுகைகளை […]

ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மற்ற பயனர்களை காட்டிலும் அதிக சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், தற்போது ட்விட்டர் ப்ளூ பயனர்கள் 2 மணி நேரம் அல்லது 8 ஜிபி அளவுடைய வீடியோக்களை பதிவேற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது. ட்விட்டர் மூலமாக, எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதே வேளையில், மற்ற ட்விட்டர் பயனர்கள், வெறும் 140 வினாடிகள் மட்டுமே இருக்கும் வீடியோக்களை மட்டுமே பதிவேற்ற முடியும் என கூறியுள்ளார்.

ட்விட்டர் ப்ளூ சலுகைகளை பெறுவதற்கான சந்தா கட்டணம், இந்தியாவில் மாதத்திற்கு 650 முதல் தொடங்குகிறது. கணினியில் 650 ரூபாய்க்கும், கைபேசியில் 900 ரூபாய்க்கும் ட்விட்டர் ப்ளூ சலுகைகளை பெறலாம். மேலும், பதிவுகளை எடிட் செய்யும் வசதி, 50% குறைவான விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை ட்விட்டர் ப்ளூ பயனர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu