வங்காளதேசத்தில் மேலும் 2 இஸ்கான் துறவிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ், இந்து பேரணியில் வங்காளதேச கொடியை அவமதித்ததாக தேச துரோக குற்றச்சாட்டு எழுந்து, கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க போராட்டங்கள் நடைபெற்றன. இதன் பின்னணியில், இந்து கோவில்கள் மற்றும் சிறுபான்மையினரின் சொத்துகள் மீது தாக்குதல்கள் அதிகரித்து, அவர்கள் சொத்துகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதனால் பலர் காயமடைந்தனர். மத்திய வெளிவிவகார அமைச்சகம், வங்காளதேச அரசை இந்துக்களை பாதுகாக்க உத்தரவிட்டது. இந்நிலையில் சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு, மருந்து மற்றும் பணம் வழங்க சென்ற 2 இஸ்கான் துறவிகள், போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.